Pages

Subscribe Twitter Twitter

Sunday, October 24, 2010









YouTube வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

நாம் சில சமயங்களில் பார்த்து ரசிக்கும் You Tube கானொளிக் காட்சிகளை
Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை/துன்பத்தை ;)  மற்றவர்களையும் பெறச் செய்ய வேண்டுமென விரும்புவோம்..ஆனால் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து பலரது பொறுமையைச் சோதித்து விடும்..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முன்னேயுள்ள பகுதி load ஆகும்வரை பொறுமை பேணி எங்சிய பகுதிக் காணொலியைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ்வாறான தளங்களின் இணைய முகவரியை முன்பொருமுறை வழங்கியிருந்தேன்.
 tubechop தளத்தில் எவ்வாறு காணொளியைக் கத்தரிப்பது என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

 முதலில் tubechop தளத்திற்குச் செல்லுங்கள்.அங்கே நீங்கள் கத்தரித்து எடுக்க விரும்பும் Youtube காணொளியின் URL ஐ உரிய இடத்தில் வழங்குங்கள்.

அப்போது நீங்கள் வழங்கிய காணொளி தேடி எடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படும்.அதில் தோன்றும் chop it ஐ சொடுக்குங்கள்.

இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் கத்தரிக்க விரும்பும் நேர இடைவெளியை வழங்குவது தான்.அதற்கு நீங்கள் கீழே கட்டமிட்டுக் காட்டப்பட்ட இரு வழிகளில் யாதாவதொன்றைப் பயன்படுத்தலாம்.இறுதியாக chop it ஐ சொடுக்கினால் போதும்.கானொளியில் நீங்கள் விரும்பும் பகுதி மட்டும் கத்தரிக்கப்பட்டு  வழங்கப்படும்.









2 comments:

சங்கர் said...

இனி நாமள் facebook ல கலக்கிறம் பாருங்க..

sinmajan said...

பாவம் உங்கள் Facebook நண்பர்கள்..