நீதியே வெல்லும் .... உண்மையே வெல்லும் .. இப்படியான கதைகளை நம்புவர நீங்கள் ??? பாவம் ... இந்த உலகத்தில் அப்பிடி ஒண்டுமே இல்லை .. எல்லாம் randomness ….
விக்கி பீடியா Randomnessஐ இவ்வாறு வரையறுக்கிறது :
“Governed by or involving equal chances for each of the actual or hypothetical members of a population; (also) produced or obtained by such a process, and therefore unpredictable in detail."
ஆம் இது தான் உண்மையில் நடக்கிறது .... எல்லா செயற்பாடுகளும் இந்த தியரிக்கு ஒத்துப் போகும் ... இல்லா விட்டால் நாங்கள் சிலவேளை ஒரேமாதிரியான நிகழ்சிகளையே கண்டுகொண்டிருப்போம் ... உலகில் பல பேர் ஒரே மாதிரியே இருப்பார் ... ஆண்களும் பெண்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் பிறப்பதும் இந்த தியரியால் நிறுவப்பட முடியும் .... அவ்வாறே இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் Randomமாகத்தான் நடக்கின்றன ...
Randomnessக்கும் எதிர்வு கூறப்பட முடியாமைக்கும் இடையிலான வித்தியாசம் ..
ஒருவருக்கு ரண்டம் ஆக தெரியும் ஒரு நிகழ்சித் தொடர் இன்னொருவருக்கு ராண்டமாக தெரிய வேண்டிய அவசியமில்லை ...
உதாரணமாக ஒருவர் ஒரு Encryption keyஐ பாவித்து ஒரு messageஐ அனுப்புகிறார் எண்டு வைத்துக் கொள்வோம் .. Encrypt பண்ணி வெளிவரும் Bit stream அந்த Encrypt பண்ணிய ஆசாமிக்கு ரண்டம் ஆக தெரியாது ... ஏனெனில் அவரால் அடுத்தடுத்து வெளிவரப் போகும் Bit களை அனுமானிக்க முடியும் ... ஆனால் இந்த Bit stream ஐ வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண ஒருவருக்கு அது ரண்டம் போல தான் தோன்றும் .. நிற்க ஒருவருக்கு ரண்டம் போல தோறும் ஒன்று இன்னொருவருக்கு ரண்டம் போல தோன்றவில்லை ... இது சற்று உதைக்கிறது... உண்மையில் ரண்டம் நிகழ்சி என்றால் அது எல்லாருக்கும் ரண்டம் ஆகத் தான் இருக்க வேண்டும் ..இந்த குழப்பத்தை நீக்க நாம் முதலில் ரண்டம் நிகழ்சிகளுக்கும் எம்மால் அனுமானிக்க முடியாத நிகழ்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும் .. எமக்கு ரண்டம் ஆக தெரியும் பல நிகழ்சிகள் உண்மையில் ரண்டம் இல்லை ... அவை ஒரு கோலத்திலேயே இயங்குகின்றன .. அந்த கோலத்தை எம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை .. ஆக இவ்வாறான நிகழ்சிகள் ரண்டம் வகையை சார்ந்தன அல்ல .. இவை அனுமானிக்க முடியாத நிகழ்சிகள்(Unpredictable events) எனும் வகையை சார்ந்தன ... உதாரணமாக Pi இன் தசம பெறுமதி ஒரு ரண்டம் நம்பர் போல தான் தெரிகிறது .. ஆனால் அது ஒரு கோலத்தில் தான் அதாவது மீளும் தசமமாக தான் வரும் என
இனி வரும் காலத்தில் சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்க கூடும் ... இப்போதைக்கு அதை சாதுரியமாக Pseudorandomஎன சொல்லி கொள்கிறார்கள் ..
கம்ப்யூட்டர் உருவாக்கும் ரண்டம் நம்பர் இந்த சூடோ ரண்டம் வகையை சார்ந்தது தான் ... உண்மையில் ரண்டம் நம்பர் வேண்டுமெனில் அது எதாவது Hardware systemஐ பாவித்து அல்லது சுழலில்(Environment) இருந்து பெறப்பட்ட எதாவது ஒரு தரவை பாவித்து தான் பெறப்பட வேண்டும் ... சில ரண்டம் நம்பர்கள் Environment Noiseஐ பாவித்து பெறப்படுகின்றன ..
இங்கு நாம் இந்த சூழல் ரண்டம் தன்மையை கொண்டது என்று கருதிக்கொள்கிறோம்... அவ்வாறே இவ்வுலகில் நடக்கும் நிகழ்சிகள் எல்லாம் ரண்டம் வகையை சார்ந்தது தான் ... "தீதும் நன்றும் பிறர் தர வாரா".... "இன்புமும் துன்பமும் மாறி மாறி வரும் "... இவை எல்லாம் இந்த ரண்டோமை அடிப்படையாக கொண்டவை தான் ... தீதும் நன்றும் மாறி மாறி வருமே ஒழிய நீ தந்தோ நானாக தேடிக் கொண்டோ வராது எண்டும் இதற்க்கு விளக்கம் கொள்ளலாம் தானே ...
இப்பிடி பாருங்கள் ..தமிழர் வெண்டு ஒரு தனி நாடு கிடைச்சிருந்தால் அதோட எல்லாம் சரியா ? ஒரு கொஞ்ச காலத்துக்கு பிறகு திரும்பவும் ஒரு பிரச்சினை வரும் .. அங்கயும் லஞ்சம் வரும் ஊழல் வரும் ..கொஞ்ச காலத்துக்கு தான் எல்லாம் இருக்கும் பிறகு அப்பிடியே தலை கீழாய் மாறும்…
சேரனும் சோழனும் பாண்டியனும் கோலோச்சிய தமிழ் பேர ரசுகள் ... செங்கிஸ்கான் கட்டி வளர்த்த மொங்கோலிய பேரரசு .... அந்த நேரம் உலகை ஆண்ட அப்படிப் பட்ட பேர ரசுகள் இன்றைக்கு அட்ரஸ் இல்லாமல் போயின ... ஆனால் அந்த நேரம் கண்டே பிடிக்கப்படாமல் இருந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக உலகை ஆளுகிறது ... இதன் அர்த்தம் என்ன ... எல்லா இனங்களுக்கும் எப்போதோ ஒரு peek கிடைகிறதா ??? இது ஒரு ரண்டம் process இல்லையா ? ஒரு Fair share method இல் எல்லா இனங்களுக்கும் ஒரு உயர்வும் தாழ்வும் வருகிறதா ??... இப்போது மறுபடியும் இந்தியாவும் சீனாவும் ஏன் இலங்கையும் மீண்டும் இவ்வுலகில் ஆதிக்க சக்திகள் ஆகின்றதை பார்த்தால் இது ஒரு ரண்டம் process போல இல்லாமல் எல்லாருக்கும் எப்போதோ ஒரு கிடைக்கும் Fair share method or Round robin method தானா??
ஆக அநீதி நீதி .. நல்லது கெட்டது.. நல்லவன் கெட்டவன் .. என்று இந்த உலகில் ஒன்றும் இல்லை ... நான்கள் தான் அவற்றை அவ்வாறு சில வரையறைகளுக்கு உட்படுத்துகிறோம் .. உண்மையில் எல்லா வகை நிகழ்வுகளும் மாறி மாறி வரும் போது அநீதி நடந்து ஒரு கொஞ்ச காலத்துக்கு பிறகு அதுக்கு எதிர்மாறான செயல் அதாவது நீதி வரும் .. அப்போது இதற்க்கு தான் காத்திருந்தது போல நாம் நீதி வென்றது என்கிறோம் அந்த இடப்பட்ட காலத்தில் அநீதியே கோலோசியத்தை அறியாமல் ..
இப்போது பிரச்சினை இந்த மாறி மாறி வரும் process ஒரு ரண்டம் process ஆ இல்லையா என்பதே ... எமக்கு ரண்டம் போல தான் தெரிகிறது ... ஆனால் சிலவேளை இந்த process sequence க்கு உரிய Key ஐ வைத்திருப்பவருக்கு இது ஒரு ரண்டம் process இல்லை ... அவர் தான் கடவுள் .... ஆம் அப்பிடி ஒரு Key இருந்தால் அதை வைத்திருப்பவர் தான் முக்காலமும் உணர்ந்த கடவுள் ....
இதை எழுதி முடிக்கையில் மேசை மீதிருந்து என்னை பார்த்து இளிக்கிறது காண்டம் பார்த்த கசட் …
References :
2 comments:
என்ன பாஷ்..!! இவ்ளோ நீளமாய்..!!
தெளிவாய் குழப்பும் முயற்சி இது..
Post a Comment