Pages

Subscribe Twitter Twitter

Tuesday, December 14, 2010









விக்கிலீக்கிற்கு மாற்றுத் தெரிவு..இதுவும் லீக் தான்..

இதுவும் லீக் தான்.. ;)

அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் உருவாக்கிவிட்டிருக்கும் பரபரப்பு இன்னும் தணியவில்லை.விக்கிலீக்ஸிற்கும் அதன் நிறுவுனர் Julian Assange ற்கும் ஆதரவாகவும் எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வரையறையற்ற இணையம்,கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் Wikileaks ற்கும் அதன் நிறுவுனரிற்கும் ஆதரவான குரல்களும் , இதனைத் தொடர்ந்து அனுமத்தித்தால் நாடுகளின் இரகசிய உள்வீட்டுத் தகவல்கள் எல்லாம் வெளிப்படைத் தன்மையின் பெயரால் சென்றடையக் கூடாதவர்களிற்கெல்லாம் சென்றடைந்து தீவிரவாதிகளை ஊக்குவிக்கும்,இறுதியில் நாடுகளிடையில் குழப்பங்களை உருவாக்கி இன்னுமோர் உலக யுத்தத்திற்கு வழிவகுத்துவிடும் Wikileaks ற்கும் நிறுவுனர் Assange ற்கு எதிரான குரல்களும் பரவலாக  எழுந்தவாறுள்ளன.

எது எவ்வாறாயினும் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டியே Julian Assange கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் மீது எவ்வாறான வழக்குகள் எல்லாம் இனித் தொடுக்கப்படும்.அதனை Julian Assange எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஆனால் அவரைப் பிணையில் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவ உலகின் பலபாகங்களில் இருந்தும் சில பெருந்தலைகள் முன்வந்துள்ள போதும் அதுவும் எந்த அளவிற்குச் சாத்தியமானது என்பதும் சந்தேகத்திற்குரியதே .
wikileaksன் சேவையை நிறுத்துவதற்கு நிகழ்த்தப்பட்ட  DNS வழித் தாக்குதல்களை பல்வேறு இணைய முகவரிகளினூடே தங்கள் சேவையை வழங்குவதன்மூலம் wikileaks முறியடித்தது என்றே கூறிவிடமுடியும்.ஆனால் wikileaks  நன்கொடை பெற ஊடகங்களாக உபயோகித்த paypal,Amazon போன்றவை பல்வேறு அழுத்தங்கள் காரணமாக  தமது சேவை வழங்கும் நிபந்தனைகளைக் காரணம் காட்டி ,அவற்றை wikileaks மீறிவிட்டதாகக் கூறி திடீரென்று தமது சேவையை  நிறுத்தியதால் wikileaks சிறிது ஆட்டங்காணக்கூடிய வாய்ப்புகள் தென்பட்டன. ஆனால் இவற்றால் கடுப்படைந்த wikileaks ஆதரவாளர்கள் (denial of service )இணைய நெரிசலை (traffic) அதிகரிப்பதனூடாக Amazon,Paypal போன்ற தளங்களை யாவரிற்கும் சேவை வழங்க முடியாத நிலைக்கு இட்டுச்சென்று  முடக்கும் முஷ்தீபுகளில் ஈடுபட்டதாகவும் ,இதனை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்து விட்டதாகவும்  Amazon,Paypal போன்ற தளங்கள் அறிவித்து விட்டன.

ஆச்சரியப் படத் தக்க வகையில்  facebook wikileaksற்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் தாங்கள் தற்போதைக்கு எடுக்கப்போவதில்லை என அறிவித்து கட்டற்ற இணைய ஆதரவாளர்களிடம் சரிந்திருந்த தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டது. twitter பிரபல tweets பகுதியில் wikileaks சம்பந்தமான செய்திகளைத் திட்டமிட்டவகையில் தவிர்க்கின்றதோ  எனச் சில கட்டற்ற இணைய ஆதரவாளர்களின் விமர்சனத்திற்குள்ளாகியது.ஆனாலும் twitter அதனை மறுத்திருந்ததோடு அதற்கான விளக்கத்தையும் தெளிவுபடுத்தியிருந்தது.

எது எவ்வாறானாலும் wikileaksன் அசுர வளர்ச்சிக்கும் அதன் இன்றைய சரிவிற்கும் பலர் அது கொண்டிருந்த சில உள் வீட்டுக் குறைபாடுகள் தான் காரணமாகிவிட்டதாக விமர்சிக்கிறார்கள். இதில் பிரதான காரணமாகக் wikileaks ஆனது அதன் நிறுவுனர் Julian Assange என்ற தனிமனிதரில் முழுமையாகத் தங்கியிருந்ததனைக் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் இரகசியமாகப் பெறும் தகவல்களை அவர்களே வெளியிடுவதால் அதன் நம்பகத்தன்மை நடுநிலையாகத் தீவிரமாக ஆராயப் படுவத்தில்லை எனும் கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.இது எந்த அளவிற்கு உண்மையானது எண்பதில் வாதப் பிரதிவாதங்கள் உள்ள போதிலும் , வெளியிடப்படும் செய்திகளால் பாதிக்கப்படும் சகல நாடுகளது கடுப்புகளும் wikileaks மீதே குவிக்கப்பட்டுவிடுகின்றது. இதனை wikileaks  தனித்தே முகங்கொடுக்க நேர்ந்தது.

இக் குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்யுமுகமாகத் தோற்றம் பெறுகிறதாம் OpenLeaks..wiki-leaks ன் முன்னாள் முக்கிய தூணும், முன்னாள் wikileaksன் ஊடகப் பேச்சாளருமான  Daniel Domscheit-Berg  புதியதொரு திட்டத்துடன் வந்திருக்கின்றார். இரகசியமான முறையில் முன்பு போலவே  செய்திகளைத் திரட்டுமாம் openleaks.. ஆனால் முன்புபோல் தாமே அதனை இணையத்தில் பிரசுரிக்க மாட்டார்களாம்.. இது விடயமாக ஆர்வம் செலுத்தும் ஏனைய ஊடகங்களுடன் இணைந்து செய்திகளை வெளியிடுமாம்..wiki-leaks முன்னாள் ஊழியர்கள் சிலரும் இவருடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார்களாம்.wikileaks நிறுவுனர் Julian Assange  முடிவுகள் எடுக்கையில் வெளிப்படைத் தன்மையின்றிச் செயற்பட்டதாகவும் தான் அவ்வாறு செயற்படப்போவதில்லை எனவும் அவர் ஊடகவியலாளர் மாநாட்டில்  தெரிவித்திருக்கின்றார் .. openleaks ற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை ஏற்கனவே ஜேர்மனியில் ஆரம்பித்துவிட்டார்களாம்..

wiki-leaksற்கு மாற்றாக open-leaks வீறு கொண்டெழுகிறதா இல்லை பிசுபிசுத்துப் போய்விடுமா..?? காலம் தான் பதில் சொல்லும்..

openleaks பற்றி WikipediAவில்..


11 comments:

Victor said...
This comment has been removed by the author.
Victor said...

'இரகசியம்' என்பது எமது முன்னேற்றத்தின் தடைக்கல், எவ்வாறு என்றால், இந்த தகவல் யுகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடத்தில் இருந்து எதிர்பார்க்கும், அடிப்படையான விடயம் உண்மையான 'அங்கீகாரமும் மெல்லிய புன்முறுவலுமே'! நேற்று எப்படி வாழ்ந்தோம் என்பது, இன்றைய யுகத்தின், ஏன் எதிர்காலத்தின் மாற்றங்களுக்குத் தேவையில்லாததும் ஒப்பிடவும் முடியாதது. Julian Paul Assange இன் முடிவும் ஒரு தீர்க்கதரிசனமான முயற்சிதான், பாரிய மாற்றங்களுக்கு வித்திடும் அவரது ஒரு கணனிப் 'பொத்தான் அளுத்துகை', எதிர்காலத்தில் !

Anonymous said...

ஒரு விக்கி லீக்ஸ்அடக்கப்பட்டால் 100 விக்கி லீக்ஸ் தோன்றும்

கார்த்தி said...

தகவல்களுக்கு நன்றி! Twitter, wikileaks பற்றிய தகவல்களை தவிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். உறுதிப்படுத்தவும்!

sinmajan said...

கார்த்தி.. twitter,உத்தியோகபூர்வமாக wikileaksஐ முடக்காமல் trend topics பகுதியில் wikileaks வ்ருவதைத் திட்டமிட்டே தவிர்க்கிறது என்றொரு விமர்சனம் இருக்கின்றது.இதன்மூலம் ஏற்கனவே follow செய்பவர்களைத் தவிர ஏனையவர்களை விடயங்கள் சென்றடையாது நுணுக்கமாக தடுக்கிறது என்கிறார்கள். இது பற்றிய ஒரு நீநீண்ட விவாதத்தைப் பார்வையிட..
http://bubbloy.wordpress.com/2010/12/05/twitter-is-censoring-the-discussion-of-wikileaks/

Prem said...

Well done man...
Nice...!!!

கன்கொன் || Kangon said...

இது தொடர்பாக ருவிற்றர் ஏற்கனவே விளக்கமளித்திருந்தது.
http://blog.twitter.com/2010/12/to-trend-or-not-to-trend.html

மற்றும்படி,
நல்ல பதிவு. :-)
பதிவுக்கு நன்றி.

sinmajan said...

இப்போது அக் குழப்பமான பகுதியைச் சீர்ப்படுத்திவிட்டேன் ..நன்றி கார்த்தி,கன்கொன்..

கணாதீபன் said...

விக்கிலீக்ஸ் Assange ரைம்ஸ் மகசினின் person of the year-2010 ல் வாசகர்களால் பெருமளவு ஆதரவுடன் தெரிவாகியுள்ளாரே?

ம.தி.சுதா said...

present .. sir

ம.தி.சுதா said...

உண்மைகள் உறங்குவதில்லையாமே....