Pages

Subscribe Twitter Twitter

Wednesday, October 13, 2010









நீங்கள் Net-cafeயில் Facebook உபயோகித்துவிட்டு Logout செய்ய மறந்து விட்டால்..


பொதுக் கணனிகளில் நீங்கள் உங்கள் Facebook கணக்கை உபயோகிக்கின்றீர்களா..? நீங்கள் ஒரு Net Cafe யில் உங்கள் Facebook  கணக்கை உபயோகித்துவிட்டு கணக்கிலிருந்து வெளியேற (Log out )மறந்துவிட்டாலோ அல்லது உங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திரு Remember me :)  தெரிவை நீக்க மறந்துவிட்டாலோ உங்கள் கணக்கில் புகும் ஒரு விசமியால் நிகழக்கூடிய விபரீதத்தை ஒரு தடவை நினைத்துப் பாருங்கள்...

இன்றுமுதல் நீங்கள் இந்தக் கவலையை விட்டுவிடலாம்.. :)

அதற்கான புதியதொரு வழிமுறையை Facebook அறிமுகப் படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து ”otp" எனப் பதிந்து 32665 க்கு குறுங்செய்தி(SMS) அனுப்பினால் போதும். உங்கள் கைத்தொலைபேசிக்கு ஒரே ஒரு தடவை மட்டும் உபயோகிக்கக்கூடிய ஒரு இரகசிய கடவுச்சொல்(password) கிடைக்கும்.இவ் தற்காலிக கடவுச் சொல் 20 நிமிட நேரத்தில் தானாகவே காலாவதியாகிவிடும்.அந்த இரகசிய கடவுச்சொல்லை உபயோகித்து நீங்கள் உங்கள் கணக்கினுள் நுளைந்து உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

எல்லாவிற்கும் மேலாக இவ் வசதியை நீங்கள் உபயோகிப்பதற்கு முதலில் உங்கள் கைத் தொலைபேசி எண்ணை முன்கூட்டியே உங்கள் Facebook கணக்குடன் இனைத்திருக்க வேண்டும் ;)

மேலதிக தகவல்களிற்காக Face Book நிறுவனத்தினரின் அறிவிப்பைப் பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.


5 comments:

கணாதீபன் said...

facebook அண்மைக்காலமாக பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்தினாலும்,அது எமக்கு செயற்படத் தொடங்க சில நாட்கள் ஆகிவிடுகின்றதே..!!

Raam said...

Useful information..

Unknown said...

நல்ல தகவல்..நன்றி

sinmajan said...

நன்றி நண்பர்களே..
கணா.. Facebook தங்கள் புதிய அறிமுகங்களை 500 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களுக்கும் ஒன்றாகவே செயற்படுத்துவதில்லைப் போலும்.. ;)

ம.தி.சுதா said...

ஆமாம் மிகவும் மக்கியமான தகவல் ஒன்ற மிக்க நன்றி..
என் தள வருகைக்கம் இணைப்புக்கும் நன்றி சகோதரம்