Pages

Subscribe Twitter Twitter

Tuesday, December 28, 2010









Windows 7.. Google Chrome.. எது உங்கள் தெரிவு..??



நீங்கள் உங்கள் கணனி உங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்கின்றதில்லையே என அடிக்கடி கடுப்பாகின்றீர்களா..?? கற்பனை செய்து பாருங்கள்..
 நீங்கள் உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்காக உங்கள் கணனியை இயக்கியவுடன் வழமைபோல் உங்கள் கணனி இயங்குநிலையை அடையும் வரை நீண்ட நேரம் காத்திருக்காமல் சில செக்கன்களிலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குச் சென்றுவிட்டால்..நீங்கள் கணனியை வாங்கும்போது இயங்கிய வேகத்திலேயே தொடர்ந்து இயங்கினால்.. நீங்கள் எங்கிருந்தாலும் திடீரென்று தேவைப்படுகையில் நீங்கள் சேகரித்த  தகவல்களை உபயோகிக்கக் கூடியதாயிருந்தால்... உங்கள் கணனி தொலைந்துவிட்டால் உங்கள் தரவுகள் முழுமையாகவே இழக்கப்பட்டுவிடுமே என்னும் பயமில்லாது போய்விட்டால்...புதிதாய் நீங்கள்  வாங்கும் வன்பொருட்களை(digitel camera,Printer,etc.) கணனியுடன் இணைப்பதற்கிடையில் நீண்ட நெடிய படிமுறைகளைத் தாண்ட வேண்டியில்லாமல் கணனியுடன் இனைத்தவுடன் வேகமாகவே உபயோகிக்கக்கூடியதாயிருந்தால்...நீங்கள் குதூகலமாயிருப்பீர்கள் என உணர்கிறீர்களா..??

கவலையை விடுங்கள்..Google உங்களுக்காகவே Chrome OS உடன் தயாராகிவிட்டது.. உங்களுக்குப் பரீச்சயமான Microsoft windows போன்ற ஆனால் புதியதொரு இயங்குதளம்(operating system)..இது பெரும்பான்மையாக இணையத்தை அடிப்படையாகக் கொண்டதொரு இயங்கு தளம்..


இவ் இயங்கு தளம் நேரடியாகவே உங்கள் Google Chrome உலாவியில்(Browser)   இயக்கத்தை ஆரம்பிக்கும்.Chrome இயங்குதளம் உங்கள் கணனியின் சேமிக்கப்படப்போவதில்லை.உங்கள் hard diskகை உபயோகிக்கப்போவதில்லை. எல்லாம் இணைய வலைப்பின்னலூடாகத் தான்.. சகல வேலைகளையும் நீங்கள் chrome உலாவியிலிருந்தே(Browser)  ஆற்ற வேண்டியது தான்.. 
Cromeஇன் ஒரு Tabல் உங்கள் word processing வேலையை,இன்னொரு  tabஇல் பாடல் கேட்பது..இன்னொரு Tabஇல் மின்னஞ்சல் உபயோகிப்பதைக் கற்பனை செய்யுங்கள்..இது தான் இந்த இயங்குதளம் இயங்கப் போகும் பாணி..ஆஹா..உடனே I  hate Chrome OS.. I dont want to listen music in a tab.. என்று facebookல் குழுமம் ஆரம்பிக்கப் புறப்பட்டுவிட்டீர்களா..??பொறுமை..பொறுமை.. உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் மாற்று ஏற்பாடாக panels வசதியை Google செய்துள்ளது.Gmail உபயோகிக்கும்போது chat வசதி கீழே Task barற்கு அண்மையில் minimize ஆகத்தக்கவாறு வருமே.அது போன்றதோர் ஏற்பாடு தான். நீங்கள் உங்கள் mouse pointer ஐ அண்மையில் கொண்டு செல்கையிலேயே உரிய panels எழுந்து இயங்கத் தகு நிலையை அடைந்துவிடும்.அதிக tab உலாவியில்(browser) இருப்பது உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அவற்றை அவற்றின் தன்மைக்கேற்ப ஒன்றாக்கும் யுக்தியையும் pinned tabs முறை மூலம் ஏற்படுத்தியுள்ளார்கள்.இது போன்ற பாவனையாளர்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இம் மாதம் முதல் பரீட்சார்த்தமாக வெவ்வேறு பட்ட தரப் பாவனையாளர்களிற்கு Chromeஇயங்கு தளமுள்ள விசேட notebook வகைக் கணனிகளை அமெரிக்காவில் புழக்கத்திற்கு விட்டுள்ளது Google.

சகல தேவையான மாற்றங்களையும் செய்த பின்னர் இவ் இயங்கு தளத்தை அடுத்த வருட நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிமுகப் படுத்த உத்தேசித்துள்ளதாம் Google.முதலில் மடிக்கணனிகளில் ஆரபித்து இரு புறமாகவும்(Desktops,Smart phones) விஸ்தரிக்க உள்தாகவும் தெரிவிக்கிறார்கள். Google ஏற்கனவே Smart phone வகையில் Android மூலம்  குறிப்பிடத்தக்கதோர் வணிக இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Chrome OS ற்கான வர்த்தக உடன்பாடு ஏற்கனவே பிரபல மடிக்கணனி நிறுவனங்களான HP,Acer,ASUS,Lenovo,Toshiba போன்றவற்றுடன் எட்டப்பட்டுவிட்டது. இவ் இயங்கு தளம் கட்டற்ற மென்போருளாகவுள்ளதால் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில்  அடுத்த வருடத்தில் மடிக்கணனிகளை எதிர்பார்க்கலாம்.

எது எவ்வாறெனிலும் Microsoft windows இன் licenceஐ நாங்கள் நன்றி..நன்றி என்று கூறிக்கொண்டேயிருக்க நமது உள்ளாடைகளை உருவும் ஓர் உடன்படிக்கை என விமர்சிப்பவர்கள் பலர் உள்ளனர். உலகில் வேறும் பல இயங்கு தளங்கள் (OS) இதுவரை அறிமுகப் படுத்தப்பட்டு போட்டியிட்டாலும் தகுந்த நெருக்கடியை அது Microsoft ற்கு வழங்கவில்லை என்பது ஏதோ உண்மை தான்.அத்துடன் Microsoft vistaவுடன் நெருக்கடிப்பட்டுக்கொண்டிருந்த 2007 காலப்பகுதியில் இவ் இயங்குதளத்தை Google  அறிமுகப் படுத்தியிருந்தால் சாதித்திருக்கலாம்.ஆனால் இப்போது Windows 7 ஓரளவு வெற்றிபெற்றுவிட்ட நிலையில் Microsoftஇடம் Googleஇன் இந்தப் பருப்பெல்லாம் வேகாது என்போரும் உள்ளார்கள்.ஆனால் Google ஒன்றும் மண்குதிரை அல்ல.பந்தயக் குதிரை.. ;)
 இந்த இயங்கு தளத்தை Google உருவாக்குவதால் அதன் வர்த்தக நாமமும், பிரபலமும், வணிக உத்தியும் சிறந்ததொரு போட்டியை Microsoft ற்கு கொடுக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
இது கொஞ்சம் ஓவர் தான் ;)


எது நடந்தாலும் “speed, simplicity and security,” எனும் Goole Chrome OS இன் தாரக மந்திரத்திற்கு எங்களூர் இணைய வேகம் ஈடுகொடுக்குமா என்பது தான் நம் முன்னாலுள்ள பெரிய சவால்...

பிற்குறிப்பு: பதிவர் ஜனா அண்னா தனது மாத்தி யோசி பதிவில் என்னை 
தொழிநுட்பம் சம்பந்தமான ஒரு நவீன பதிவு எழுதுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.இயல்பாகவே எனக்கு Google மீதுள்ள ஆர்வத்தால் இவ் இயங்குதளம் பற்றி எழுதுவோமா வேண்டாமா என சிந்தித்துக் கொண்டிருக்கையில் அவரது இந்த அழைப்பு சாதகமாய்ப் போய்விட்டது..
( தொழிநுட்ப ஆணியே பிடுங்கவேண்டாமென்ற நண்பர்களிடமிருந்து தப்பிக் கொள்ள.. ;) )


16 comments:

நிரூஜா said...

நல்ல பதிவு.

நிறைய தேடி இருக்கின்றீங்கள். பதிவு நன்றாக உள்ளது

நானும் ஒரு முறை இது பற்றி நோண்டிப்பார்த்தேன். தற்போது இது netbook களுக்கு மாத்திரமே வெளியிடப்படுகின்றது. மட்டுமல்லாமல், இந்த இயங்கு தளத்தை பயன்படுத்தும் போது இணைய வசதி இருந்தால் தான் இதன் அதிக பட்ச பலனைப் பெற முடியும். குறிப்பாக, நாம் வெளியே ஒரு harddiskக் ஐ பயன்படுத்தி எமது தரவுகளைச் சேமித்து வைத்திருந்தாலும், செயலிகள் அனேகமாக இணைய இணைப்பை பெற்றால் மட்டுமே சாத்தியம் என நினைகின்றேன்.

அடுத்து, இது வெறும் பாடல் கேட்பதற்கும், படம் பார்ப்பதற்கும் மற்றும் வெறும் word, excel போன்றவற்றுடன் வேலை செய்பவர்களுக்கே தற்போது உகந்ததாக இருக்கும்.

graphics, animations, software development போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்துவது தற்போது சாத்தியமற்றது.

KANA VARO said...

நல்ல தகவல்கள் ஜனகன்... மாத்தியோசியை கலக்கலா ஆரம்பித்து வைத்துள்ளீர்கள்.

Jana said...

கலக்கிவிட்டீங்களே...
கூகுல் குரோம்தான் நான் பாவிக்கின்றேன். ஒஸ் பற்றியும் கூறியுள்ளீா்கள். தெய்வத்துக்கிட்ட கேளுங்களேன் என்று சொன்னால் தெய்வம் பற்றியே எழுதி அசத்திட்டீங்களே!

கணாதீபன் said...

இணையத்திற்காக cafe செல்லும் பலருக்கு இது சரி வராதே

பகீ said...

எந்த விதத்திலும் ஒப்பிட்டு பார்க்கமுடியாத இரு விடயங்களை ஒப்பட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக உடன்பாடில்லை.

http://oorodi.com

sinmajan said...

@ நிரூஜா
graphics, animations, software development போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு இவ் இயங்கு தளம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்று தான் நானும் நினைக்கிறேன்

sinmajan said...

@வரோ
நீங்கள் மாற்றி யோசியில் எப்போது கலக்கப் போகிறீர்கள்? :)

sinmajan said...

நன்றி ஜனா அண்னா :)

sinmajan said...

தங்கள் கருத்திற்கு நன்றி பகி அண்ணா..
எந்தவகையிலும் ஒப்பிட முடியாதது என எவ்வாறு கருதுகிறீர்கள் எனப்புரியவில்லை. Microsoft இன் இயங்குதள ஆக்கிரமிப்பிற்கெதிராக.. இயங்கு தளங்களிற்காக Microsoft தயாரித்து வைத்துள்ள வரைவிலக்கணத்தையே மாற்றிப்போடும் ஓர் முயற்சியாகவே இதை நான் கருதுகிறேன்..Google Vs Microsoft என்ற வகையில் ஒப்பிட்டுப்பார்க்லாம் என்றே நான் கருதுகின்றேன்..

sinmajan said...

@கணா
சிக்கலிருக்கத்தான் செய்யும்..

ஷஹன்ஷா said...

நல்ல தேடல்....அருமை......

Uthistran said...

நல்ல பதிவு ஜனா.. ஆனால் கூகிளின் தேடர்போறியையும் gmail ஐயும் தவிர ஏனைய buzz,wave,chrome என்பன success அல்ல ... chrome இடைக்கிடை crash ஆவதை இன்னும் கூட சரி செய்யவில்லை ... எனது கருத்துப்படி இன்னும் ஒரு 10 வருசத்துக்குMicrosoft ஐ அசைக்க முடியாது ... உண்மையில் windows 7 ஒரு சிறந்த OS என்பதை அனைவரும் மனதுக்குள் ஒத்துக் கொள்வர் .... வெளியில் எதிர்ப்பார் .. ஏனென்டால் Microsoftஐ கூடாது எண்டு சொல்றவன் தான் கணனில பெரிய ஆள் ஏன்டா ஒரு Aspect ஊர்ல இருக்கு

ம.தி.சுதா said...

நல்ல தேடல் தான் ஜனா.. வாழ்த்துக்கள்.. எனக்கு இது புதுமையானவையே...

sinmajan said...

நன்றி ஜனகன்,ம.தி. சுதா

sinmajan said...
This comment has been removed by the author.
sinmajan said...

@Uthistran: Youtube,Google maps,Android போன்றவற்றையெல்லாம் புறக்கணித்து விட முடியாது. இணையத் தொழிநுட்ப உலகில் Google தான் வல்லரசன் என என்ணுகிறேன்..